
மதுரை, ஆகஸ்ட் 29-
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அன்னதானம், நீர்மோர் மற்றும் பிற உணவுப்பொருட்களை பக்தர்களுக்கு வழங்க விரும்புவோர், உணவுப்பாதுகாப்புத்துறையின் ஆன்லைன் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.















