Home மாவட்டங்கள் பெங்களூர் முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

சென்னை: செப். 9-
தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
இப்போது 2-ம் கட்ட கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு ஆதரவு கட்சியினரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.