Home செய்திகள் தேசிய செய்திகள் முதல்வர் பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை

முதல்வர் பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை

கொல்கத்தா, மே 7- மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.​வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதி​காரி பதவி​யேற்க உள்​ள​தாகத் நம்பத் ​தகுந்த வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இதன் மூலம், தனது அரசி​யல் குரு​வான மம்தா பானர்​ஜி​யின் இடத்தை தட்​டிப் பறிக்​கிறார் சுவேந்து அதி​காரி. மேற்கு வங்க தேர்​தலில் அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​துள்ள பாஜகவின் சட்​டமன்​றக் குழுக் கூட்​டம், கொல்​கத்​தா​வில் வெள்ளிக்​ கிழமை (மே 8) நடை​பெறுகிறது. இக்​கூட்​டத்​தில், சட்டமன்​றக் கட்​சித் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாகத் தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ள​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன.கட்​சி​யின் மாநிலத் தலை​வர் சாமிக் பட்​டாச்​சார்​யா, சுவேந்து அதிகாரி​யின் பெயரை முன்​மொழிய, மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அதனை முறைப்​படி அறிவிக்க உள்​ளார். இதனைத் தொடர்ந்​து, சுவேந்து அதி​காரி, சாமிக் பட்​டாச்​சார்யா மற்​றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செய​லா​ளர் சுனில் பன்​சல் ஆகியோர் ஆளுநர் மாளி​கைக்​குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்​ளனர். புதிய அரசு பதவி​யேற்​கும் விழா சனிக்​கிழமை (மே 9) நடை​பெறும் என்று சாமிக் பட்​டாச்​சார்யா உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்​திர ஜெயந்​தி’ அன்று இப்​ப​தவி​யேற்பு விழா நடைபெறு​வது குறிப்​பிடத்​தக்​கது. மேற்கு வங்​கத்​தில் முதல் முறை​யாக அமைய​வுள்ள பா.ஜ.க. ஆட்சி​யின் தொடக்க விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​து​கொள்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், மத்​திய அமைச்சர்​கள், கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களின் முதலமைச்​சர்​களும் இந்த பிரம்​மாண்ட விழா​வில் பங்​கேற்க உள்​ளனர். மேற்கு வங்​கத்​தின் முதலமைச்​சர் என்​பவர் மண்​ணின் மைந்தராக​வும், வங்​காள மொழி​யில் பயின்​றவ​ராக​வும் இருக்க வேண்​டும் என்று அமித் ஷா ஏற்​கெனவே குறிப்​பிட்​டிருந்​தார். அந்த தகு​தி​கள் அனைத்​தை​யும் பூர்த்தி செய்​பவ​ராக சுவேந்து அதி​காரி திகழ்​கிறார். இதனிடையே முதல்​வர் பதவிக்​கான பந்தயத்தில் அசன்​சோல் தெற்​குத் தொகு​தி​யில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.​வின் அக்​னிமித்ரா பாலின் பெயரும் பலமாக அடிபடு​கிறது. இது குறித்து பா.ஜ.க.​வின் மூத்த நிர்​வாகி ஒரு​வர் கூறுகை​யில், “முதல்​வர் பதவிக்​கான பட்​டியலில் சுவேந்து அதி​காரி​யின் பெயர் முதலிடத்​தில் உள்​ளது. அதே நேரத்​தில், மாநிலத் தலை​வர் சாமிக் பட்​டாச்​சார்யா மற்​றும் மாநிலத் துணைத் தலை​வர் அக்​னி மித்ரா பால் ஆகியோரின் பெயர்​களும் முன்​மொழியப்​பட்​டுள்​ளன” என்றார். அசன் ​சோல் தெற்​குத் தொகு​தி​யில் திரிணா​மூல் காங்​கிரஸின் தபஸ் பானர்​ஜியை 40,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​கள் வித்தியாசத்​தில் வீழ்த்தி அக்​னிமித்ரா பால் அபார வெற்றி பெற்றுள்​ளார்.