Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி?

மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி?

கொல்கத்தா: ஏப்ரல் 30-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதுவரை வெளியான சர்வேக்களை வைத்துப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஒரு அரசியல் பூகம்பம் ஏற்படுவது போலவே தெரிகிறது. மம்தாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வரலாம் என்றே பல்வேறு சர்வேக்களும் கூறியுள்ளன. மேற்கு வங்கத் தேர்தல் களம் தற்போது இந்திய அரசியலின் உச்சக்கட்டப் பரபரப்பாக மாறியிருக்கிறது. 2014 முதல் மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்க்க முயற்சி செய்து வரும் பாஜகவிற்கு, இது ஒரு வாழ்வா சாவா போராட்டமாக உருவெடுத்துள்ளது. 15 ஆண்டுக்கால திரிணாமுல் ஆட்சியை வீழ்த்தி, மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற பாஜக தனது முழு பலத்தையும் பிரயோகித்துள்ளது.மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இதுவரை வெளியான எக்சிட் போல் முடிவுகள் இரண்டு துருவங்களாகப் பிரிந்து கிடப்பதுதான் இந்தத் தேர்தலின் ஆகப்பெரிய சுவாரஸ்யம். இருப்பினும், பெரும்பாலான சர்வேக்கள் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவுகளைச் சொல்கின்றன.
பாஜகவிற்குச் சாதகமாக நான்கு கணிப்புகளும், மம்தாவுக்குச் சாதகமாக இரண்டு கணிப்புகளும் வெளியாகியுள்ளன.. இதுவரை வெளியான எக்சிட் போல்களில் நான்கு முன்னணி எக்சிட் போல்கள் பாஜக இந்த முறை மம்தாவின் கோட்டையைத் தகர்த்து, 146 முதல் 175 இடங்கள் வரை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, பீப்பிள்ஸ் பல்ஸ் (People’s Pulse) 177 – 187 இடங்களையும், ஜன்மத் போல்ஸ் (Janmat Polls) 195 – 205 இடங்களையும் மம்தாவுக்கு வழங்கி, அவர் நான்காவது முறையாக அரியணை ஏறுவார் எனக் கணித்துள்ளன.