Home விளையாட்டு யு-19 ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி

யு-19 ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி

ககாமிகஹாரா, ஜூன் 6- யு-19 ஆசிய ஹாக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா – சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணி தரப்பில் 3-வது நிமிடத்தில் நூஷின் நஸும், 54-வது நிமிடத்தில் கிரணும் கோல் அடித்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட ஷுட்அவுட்டில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.