
பெங்களூரு: ஆக. 25-
பெங்களூர் நெலமங்கலாவில் சங்கிலி திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்ட ரவுடி பேட்டரி ஜெயந்த் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
நெலமங்கலா தாலுக்காவில் உள்ள தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் ரவுடி பேட்டரி ஜெயந்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நெலமங்கலாவின் குலுவனஹள்ளி நுழைவாயில் அருகே ஒரு மூதாட்டியிடமிருந்து சங்கிலி திருட முயன்றபோது பேட்டரி ஜெயந்தும் யதீஷும் பிடிபட்டனர். பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர்
பிறகு அவர்கள் சுயநினைவை இழந்தனர். அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸிலிருந்து தப்பிச் சென்றனர்.
தற்போது ஜெயந்தின் உடல் தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளியான யதீஷை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயந்த் மீது கொலை முயற்சி, அச்சுறுத்தல் மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட மேலும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெலமங்களா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.













