
புதுடெல்லி, ஜூலை 21- வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டவதற்கு டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், 5 இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், 5 இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.














