Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.23,437 கோடி – 3 ரயில்வே திட்டங்கள்

ரூ.23,437 கோடி – 3 ரயில்வே திட்டங்கள்

புதுடெல்லி: மே 6-
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் ரூ.23,437 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் மூலம், இந்திய ரயில்வேயின் தற்போதைய வழித்தடங்களுடன் கூடுதலாக சுமார் 901 கி.மீ. தொலைவு இணைக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தின்படி, நாக்தா – மதுரா, குண்டக்கல் – வாடி, புர்ஹ்வால் – சீதாப்பூர் ஆகிய வழித்தடங்களில் 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ”அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட வழித் தடங்களில் இந்தப் புதிய பாதைகள் அமைக்கப்படுவதால், முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் இயக்கம் சீராகும். பிராந்திய மக்களின் வேலை வாய்ப்பு, சுய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து (தலைமை நீதிபதி உட்பட) 38 ஆக உயர்த்தும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.