Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.3.23 கோடி மோசடி புகார்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன்

ரூ.3.23 கோடி மோசடி புகார்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன்

சென்னை: ஜூலை 1-
நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ளாமலே ஒப்​பந்​த​தா​ரர்​கள் ரூ.3.23 கோடி பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அரசு அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கடந்த 24-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​தனர்.
இதையடுத்​து, 25-ம் தேதி எ.வ. வேலு மற்​றும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் வீடு, அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. சென்​னை​யில் 4 இடங்​கள், திரு​வண்​ணா​மலை – 4, கரூர் – 7, திண்​டுக்​கல் – 2, கோவை – 2, திருப்​பூர் – 1 என மொத்​தம் 20 இடங்​களில் சோதனை நடந்​தது.
இந்த சோதனை​யின்​போது, நெடுஞ்​சாலைத் துறை தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சான்​றுகள், சொத்து மதிப்பு மற்​றும் முறை​கேட்டை உறு​திப்​படுத்​தும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள், கணக்​கில் வராத ரூ.40 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக​வும், மேல் விசா​ரணை தீவிர​மாக நடந்து வரு​வ​தாக​வும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில், இந்த வழக்கு விவ​காரம் தொடர்​பாக ஓரிரு நாளில் விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என எ.வ.வேலு​வுக்கு லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சம்​மன் அனுப்பி உள்​ளனர்.