
பாட்னா, ஜன. 26- ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) செயல் தலைவராக தேஜஸ்வி யாதவை லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். இதை சதி என லாலு மகள் ரோகிணி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பல இடங்களில் தோல்வியடைந்ததால் பின்னடைவை சந்தித்தது. தேர்தல் நேரத்தில் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தெரிவித்த கருத்துக்கள்தான் தோல்விக்கு காரணம் என கருதிய தேஜஸ்வி யாதவ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ரோகிணி ஆச்சார்யா. லாலு வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறினார்இ ந்நிலையில், ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேஜஸ்வி யாதவை ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயல் தலைவராக லாலு அறிவித்தார். அப்போது ரப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி மூத்த தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.












