Home விளையாட்டு வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலிய அணி

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலிய அணி

மிர்பூர்: ஜூன் 10-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையிலான முதல் ஒரு​நாள் போட்டி நேற்று மிர்​பூரில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்கெட்கள் இழப்​புக்கு 284 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மோசடக் ஹொசைன் 70 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்டரிகளு​டன் 86 ரன்​கள் விளாசி​னார். நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 67, தன்​ஸித் ஹசன் 67 ரன்​கள் சேர்த்​தனர்.
285 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 42.2 ஓவர்களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 191 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் தடைபட்​டது. மேத்யூ ஷார்ட் 0, கூப்​பர் கானொலி 35, மார்​னஷ் லபுஷேன் 1, கேப்​டன் ஜோஷ் இங்லிஷ் 19, அலெக்ஸ் கேரி 47, மேட் ரென்ஷா 2, லியாம் ஸ்காட் 2, சேவியர் பார்ட்​லெட் 1, நேதன் எல்​லிஸ் 8 ரன்​களில் நடையை கட்டினர். வங்​கதேசம் அணி சார்​பில் நஹித் ராணா 4 விக்கெட்களை​ வீழ்த்​தினர்.
கேமரூன் கிரீன் 52, ஆடம் ஸாம்பா 6 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர். மழை காரணமாக ஆட்டத்தை தொடர முடியாததால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.