விஜய்யிடம் செல்போனில் 20 நிமிடம் பேசிய ஓபிஎஸ்

சென்னை: டிசம்பர் 26-தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன் போனில் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அமமுகவின் டிடிவி தினகரனைப் போலவே, ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்காது என அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு இப்போது திமுக அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது. ஏற்கனவே டிடிவி தினகரன் விஜய்யுடன் நெருக்கம் காட்டுகிறார்.
சமீபத்தில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.