Home செய்திகள் தேசிய செய்திகள் வீட்டு வேலையில் இருந்து சட்டப்பேரவைக்கு – எம்எல்ஏ ஆன பெண்ணின் வெற்றிக் கதை

வீட்டு வேலையில் இருந்து சட்டப்பேரவைக்கு – எம்எல்ஏ ஆன பெண்ணின் வெற்றிக் கதை

கொல்கத்தா: மே 6-
மேற்கு வங்க மாநிலம் குஸ்​காரா நகரசபை பகு​தி​யைச் சேர்ந்​தவர் கலிதா மாஜி. இவர் இங்​குள்ள வீடு​களில் துணி துவைப்​பது, பாத்​திரம் தேய்ப்​பது, சமையல் செய்​வது போன்ற வீட்டு வேலையை செய்து வந்​தார். இதன்​மூலம் அவருக்கு மாதம் ரூ.2,500 மட்​டுமே கிடைத்து வந்​தது. சுமார் 4 வீடு​களில் இந்த வேலையை கலிதா மாஜி செய்து வந்​தார்.
இந்​நிலை​யில் அவர் பாஜக​வில் கடந்த 2018-ல் இணைந்​தார். 2021-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் அவர், அவுஸ்​கி​ராம் தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு தரப்​பட்​டது. ஆனால் அந்​தத் தேர்​தலில் திரிண​மூல் வேட்​பாளர் அபே​தானந்தா தாண்​டரிடம் 11,815 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தார். தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்து வந்​த​போதும் அவருக்கு வெற்றி கிட்​ட​வில்​லை.
இந்​நிலை​யில் இந்​தத் தேர்​தலில் அவருக்கு மீண்​டும் அதே அவுஸ்​கி​ராம் தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு தரப்​பட்​டது. கடந்த தேர்​தல் தோல்​வி​யால் அவர் மனம் துவளாமல் களத்​தில் இறங்​கி​னார். தொகுதி முழு​வதும் சூறாவளி​யாக சுழன்று பிரச்​சா​ரம் செய்​தார் கலிதா மாஜி. தேர்​தலின் முடி​வில் கலிதா மாஜி 1,07,692 வாக்​கு​கள் பெற்று மகத்​தான வெற்​றியைக் கொண்டு வந்​துள்​ளார். இதன்​மூலம் ஏழ்மை நிலை​யில் உள்​ளவரை​யும், எம்​எல்​ஏ​வாக உயர்த்தி சமூக நீதியை பாஜக மேலிடம் நிலை​நாட்​டி​யுள்​ளது என்று பொது​மக்​கள் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்.
வீட்டு வேலை செய்​து​கொண்​டிருந்த பெண்​ணை, கட்​சி​யில் இணைத்து எம்​எல்​ஏ​வாக்​கி​யுள்ள பாஜக தலை​வர்​களுக்கு தொண்​டர்​கள் வாழ்த்து தெரி​வித்து வரு​கின்​றனர். கலிதா தொடர்​பான செய்​தி, புகைப்​படங்​கள், வீடியோக்​கள் இணை​யதளத்​தில் வைரலாகி வருகின்​றன.