Home விளையாட்டு ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆன்டாரியோ, ஆக. 1- க​ன​டா​வின் ஆன்​டோரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் அணி​கள் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வருகிறது. இதில் அரை இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி 0-2 என்ற கணக்​கில் அமெரிக்​கா​விடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்​கம் பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் முதல் ஆட்டத்​தில் குர்​வீர் சிங் 7-11, 12-10, 9-11, 7-11 என்ற செட் கணக்​கில் பிரென்​டன் டாக்​லி​யாரினி​யிடம் தோல்வி அடைந்​தார். அடுத்த ஆட்​டத்​தில்​, ஆர்​ய​வீர் திவான் 5-11, 7-11, 5-11 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் யாசீன் ஷலாபிடம் வீழ்ந்​தார்​.