Home செய்திகள் உலக செய்திகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து

ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து

டெஹ்ரான்/மஸ்கட், ஆக. 6- உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மிக முக்கிய பாதையாகத் திகழும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடர்பாக, ஈரானுக்கும் ஒமனுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மற்றும் தூதரக ரீதியில் நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தச் சிறப்புப் பாதை குறித்த கூட்டு அறிவிப்பை இரு நாடுகளும் இறுதி செய்து வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, பாரசீக வளைகுடாவுக்குள் நுழையும் கப்பல்களைக் கட்டுப்படுத்தவும், பரிசோதிக்கவும் ஈரானுக்கு முழு உரிமை கிடைக்கும். அதேவேளையில், இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்போ அல்லது மற்ற நாடுகளோ தலையிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையையும் ஈரான் விதித்துள்ளது. மேலும், இப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க கதார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய சூழலில், அமைதித் தீர்வு நோக்கிய இந்த முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளது.