Home மாவட்டங்கள் பெங்களூர் 2 தொகுதிகள் இடைத்தேர்தல்வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

2 தொகுதிகள் இடைத்தேர்தல்வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: செப்.9-
தமிழகத்​தில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​த​தால் காலி​யான மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என்று இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.
தமிழகத்​தில் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு இரண்​டிலும் முதல்​வர் விஜய் வெற்றி பெற்​றார். முதல்​வ​ராகப் பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.
பின்​னர், சி.​விஜய​பாஸ்​கர் (விராலிமலை), எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகிய 6 அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.
இதில், திருச்சி கிழக்​கு, விராலிமலை, கரூர், பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​கள் தொடர்​பான தேர்​தல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்நிலையில், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்​ளது.
இதற்​கிடையே, இடைத்​தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் நாளை (செப்​.9) தொடங்​கு​கிறது. செப்​.16-ம் தேதி மனு​தாக்​கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடை​பெறுகிறது. மனுக்​களை திரும்​பப் பெற 19-ம் தேதி கடைசி நாள். அக்​.6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறும். வாக்கு எண்​ணிக்கை அக்​.9-ம் தேதி நடக்​கிறது. அனைத்​து தொகு​தி​களி​லும்​ தேர்​தல்​ நடத்​தை வி​தி​கள்​ அமலுக்​கு வந்​துள்​ளன.