Home பக்தி 23-ல் தொடக்கம் கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்

23-ல் தொடக்கம் கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதி: ​மே 12-
திருப்​பதி நகரின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்ள கோவிந்​த​ராஜர் திருக்​கோ​யில் மிக​வும் பிரபல​மானது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் ஒன்​றான இக்​கோயி​லில் வரும் மே.23-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​களுக்கு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் நடை​பெற உள்​ளது.இதில் காலை 7 மணி​யில் இருந்து 9 மணி வரை​யிலும் பிறகு இரவு 7 மணி​யில் இருந்து 9 மணி வரை​யிலும் வாகன சேவை​கள் நடை​பெறும். இதில் முக்​கிய​மாக மே.27-ம் தேதி இரவு கருட சேவை​யும் 30-ம் தேதி காலை தேர்த் திரு​விழா​வும், 31-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்​சி​யும் நடை​பெறும்.