Home பக்தி திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

சென்னை: ஜூன் 26-
திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்​றத்​துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் தேதி தேரோட்​டமும் நடைபெற உள்ளது.சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாள​மாக​வும், 108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றாக​வும் திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் திகழ்​கிறது. இத்​தலத்​தில் வீற்​றிருக்​கும் மூல​வர் பார்த்​த​சா​ரதி பெரு​மாளுக்கு சித்திரை மாதத்​தி​லும், மேற்கு நோக்கி அருள்​பாலிக்​கும் நரசிம்மருக்கு ஆனி மாதத்​தி​லும் பிரம்​மோற்சவம் நடை​பெறும்.
கொடியேற்​றம் அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நரசிம்ம பெரு​மாள் பிரம்​மோற்சவ விழா, நேற்று அதி​காலை கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.
இதைத் தொடர்ந்து, தர்மாதிபீடத்தில் நரசிம்ம சுவாமி மாட வீதிகளில் வலம் வந்தார். இரவு 7.45 மணி அளவில் புன்னை வாக​னத்​தில் வீ​திஉலா நடைபெற்றது. பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான கருட சேவை நாளை (ஜூன் 27) அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
28-ம் தேதி காலை சூரியபிரபை, இரவு சந்​திரபிரபை​யில் பெரு​மாள் எழுந்​தருள்கிறார். விழா​வின் மற்​றொரு முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் ஜூலை 1-ம் தேதி நடை​பெறுகிறது.
அன்று அதி​காலை 5 மணிக்கு பெரு​மாள் திருத்​தேரில் எழுந்​தருள, காலை 7 மணிக்கு தேரோட்​டம் தொடங்​கும். ஜூலை 4-ம் தேதி சிறிய திருத்​தேர் நிகழ்வுடன் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது.