4-வது போட்டியை இந்தியா டிரா செய்தது எப்படி? – மான்செஸ்டர் டெஸ்ட் ஹைலைட்ஸ்

மான்​செஸ்​டர், ஜூலை 28- இந்​தி​யா, இங்​கிலாந்து அணி​களுக்கு இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி டிரா​வில் முடிவடைகிறது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் சிறப்​பாக விளை​யாடி சதமடித்​தார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் டெஸ்​டில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்​டில் இந்​தி​யா​வும், 3-வது டெஸ்​டில் இங்​கிலாந்​தும் வெற்றி பெற்​றன. இதையடுத்து தொடரில் இங்​கிலாந்து 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 23-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி மான்​செஸ்​டரில் உள்ள ஓல்டு டிரா​போர்ட் மைதானத்​தில் தொடங்​கியது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 358 ரன்​களுக்​கும், இங்​கிலாந்து அணி 669 ரன்​களுக்​கும் ஆட்​ட​மிழந்​தது. இதனால் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 311 ரன்​கள் முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 174 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற கடைசி நாள் ஆட்​டத்தை கே.எல்​.​ராகுல் 87 ரன்​களு​ட​னும், கேப்​டன் ஷுப்​மன் கில் 78 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். இரு​வரும் நிதான​மாக விளை​யாடினர். ஆனால், சதமடிப்​பார் என எதிர்​பார்க்​கப்​பட்ட ராகுல் 90 ரன்​கள் எடுத்​திருந்​த​போது கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பந்​து​வீச்​சில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து கேப்​டன் கில்​லுடன், வாஷிங்​டன் சுந்​தர் இணைந்​தார். இரு​வரும் நிதான​மாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர். சிறப்​பாக விளை​யாடிய கில், டெஸ்ட் போட்​டிகளில் தனது 9-வது சதத்​தைக் கடந்​தார்.
இந்​தத் தொடரில் அவர் எடுக்​கும் 4-வது சதமாகும் இது. சதத்​தைக் கடந்த சில நிமிடங்​களில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​து​வீச்​சில், ஜேமி ஸ்மித்​திடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார் கில். அவர் 238 பந்​துகளில் 103 ரன்​கள்​(12 பவுண்​டரி​கள்) எடுத்​தார். பின்​னர் வாஷிங்​டன் சுந்​தருடன், ரவீந்​திர ஜடேஜா இணைந்து பொறுப்​புடன் விளை​யாடினர். மதிய உணவு இடைவேளை​யின்​போது இந்​திய அணி​யின் ஸ்கோர் 4 விக்​கெட் இழப்​புக்கு 223 ரன்​களாக இருந்​தது. உணவு இடைவேளைக்​குப் பின்​னர் சுந்​தரும், ஜடேஜா​வும் பொறுமை​யுடன் விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர். இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பந்​து​வீச்​சாளர்​களை மாற்​றிப் பார்த்​தும் பலனில்​லை.