Home மாவட்டங்கள் பெங்களூர் 57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்

57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: ஜூன் 12-
அரக்கோணம் யார்​டில் மறுசீரமைப்பு பணி நடக்​க​வுள்​ள​தால், 57 ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்​திக் குறிப்​பு: அரக்​கோணம் யார்​டில் மறுசீரமைப்பு பணி நடக்​க​வுள்​ள​தால், 57 ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது.
இதன்படி அரக்​கோணம் – திருத்​தணிக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 4, 5 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திருத்​தணி – அரக்​கோணத்​துக்கு இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திருத்​தணி – சென்னை சென்ட்​ரலுக்கு காலை 6.30 மணிக்கு இயக்​கப்​படும் மின்சார ரயில் ஆகிய 5 ரயில்​கள் ரத்து செய்​யப்படும்.
சென்னை சென்ட்​ரல் – திருச்​சானூருக்கு ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயில், திருச்​சானூர் – சென்னை சென்ட்​ரலுக்கு மேற்​படி நாட்​களில் மதி​யம் 1.30 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயில், அரக்​கோணம் – வேலூருக்கு மேற்​படி நாட்​களில் பிற்​பகல் 2.50 மணிக்​கும், வேலூர் – அரக்​கோணத்​துக்கு காலை 10 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயிலும் ரத்து செய்​யப்படுகிறது.
சென்னை கடற்​கரை – அரக்​கோணத்​துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 4.05, மதி​யம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திரு​வாலங்​காடு – அரக்​கோணம் இடையே பகுதி ரத்து செய்​யப்படுகிறது.