Home மாவட்டங்கள் பெங்களூர் 7 பேர் கொலை; சடலங்களை கொண்டு செல்ல ‘பிரஸ்’ ஸ்டிக்கர் வாகனம்

7 பேர் கொலை; சடலங்களை கொண்டு செல்ல ‘பிரஸ்’ ஸ்டிக்கர் வாகனம்

பெங்களூரு, நவ. 16-
கர்நாடக மாநிலத்தையே உலுக்கிய ஏழு பேர் தொடர் கொலை வழக்கில், யாருக்கும் சந்தேகம் வராமல் பிணங்களைக் கொண்டு செல்வதற்காக முக்கிய குற்றவாளி இந்துசேகர் தீட்டியிருந்த திட்டமிட்ட சதி போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
போலீஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக குற்றவாளி இந்துசேகர் பத்திரிகைத் துறையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.பிணங்களைக் கொண்டு செல்வதற்காக இந்துசேகர் தனது மஞ்சள் போர்டு டொயோட்டா எட்டியோஸ் காரைப் பயன்படுத்தியுள்ளார். சோதனைச் சாவடிகளில் போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்வதைத் தவிர்ப்பதற்காக, காரின் முன்பக்கக் கண்ணாடியில் ‘பிரஸ்’ ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார்.நம்பர் பிளேட்டை மறைத்து பேனர்இத்துடன் நில்லாமல், தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ‘பத்திரிகையாளர்கள் சுற்றுலா’ என்ற வாசகம் அடங்கிய பெரிய பேனர் ஒன்றையும் அவர் தயார் செய்திருந்தார். காரின் நம்பர் பிளேட் தெரியாதவாறு அந்த பேனரைக் குறுக்கே கட்டிவிட்டு அவர் காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வழியில் யாராவது காரை நிறுத்தி விசாரித்தால், தன்னிடமிருந்த உள்ளூர் செய்தித்தாள் மற்றும் விசிட்டிங் கார்டைக் காண்பித்துத் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், பத்திரிகையாளர்கள் சுற்றுலா செல்வதாகக் கூறி யாருக்கும் சந்தேகம் வராமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இவ்வாறு பத்திரிகையாளர் என்ற பெயரில் போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்கும் தந்திரத்தைக் கையாண்ட இந்துசேகர், ஏழு பிணங்களைக் கொண்டு செல்லும்போதும் யாருக்கும் துளியும் சந்தேகம் வராதபடி மிகத் துல்லியமாகத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி இந்துசேகருக்கும் சுனிதாவுக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினர் ராஜாஜிநகர் பாஷ்யம் சர்க்கிள் அருகே வசித்து வந்தனர். சுனிதா அடிக்கடி தனது தாய் வீட்டிற்குச் சென்று வந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான சுமார் 15 நாட்களில் அடுத்தடுத்து ஏழு பேரைக் கொலை செய்துவிட்டு இந்துசேகர் சிறைக்குச் சென்றுள்ளார்.