Home செய்திகள் தேசிய செய்திகள் 79 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்தின் வருகையை கொண்டாடிய கிராமம்

79 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்தின் வருகையை கொண்டாடிய கிராமம்

ஜெய்ப்பூர், ஆக. 9- ராஜஸ்​தான் மாநிலம் அஜ்மீர் மாவட்​டத்​தில் தொலை​தூரத்​தில் அமைந்​துள்​ளது குர்​தல் மற்​றும் கேரோட் கிராமங்​கள். நாடு சுதந்​திரமடைந்து 79 ஆண்​டு​கள் கடந்​தும் இது​வரை அந்த கிராமங்​களுக்கு பேருந்து வசதி இல்​லை. இந்​நிலை​யில், குர்​தல் கிராமத்​துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. ராஜஸ்​தான் ரோட்​வேஸ் பேருந்து கிராமத்​துக்​குள் நுழைந்​ததும், பொது​மக்​கள் சாலை​யின் இரு​புற​மும் வரிசை​யாக நின்​று, அதன் மீது மலர்​களைத் தூவி, ஆரத்தி எடுத்​து, மேள​தாளத்​துக்​கேற்ப நடன​மாடி வரவேற்​றனர். பேருந்​தின் ஓட்​டுநருக்​கும் நடத்​துநருக்​கும் பொது​மக்​கள் தலைப்பாகை அணி​வித்​து, மாலை சூட்டி கவுர​வித்​தனர். ராஜஸ்தானின் கேக்​கிரி பகு​தி​யில் உள்ள குர்​தல் மற்​றும் அண்டை கிராம​மான கேரோட் ஆகிய கிராமங்​களுக்கு இந்​தப் பேருந்​தின் வருகை ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க தருணம் என்று பல பயனர்கள் வர்​ணித்து கருத்து தெரி​வித்​துள்​ளனர். இந்​தப் பேருந்து அரு​கிலுள்ள நகரங்​கள், சந்​தைகள், மருத்துவமனை​கள், பள்​ளி​கள் மற்​றும் அரசு அலுவலகங்களுக்கான இணைப்பை மேம்​படுத்​தும் என்று எதிர்பார்க்​கப்​படுகிறது.