
டெஹ்ரான்: ஜனவரி 7-
ஈரானில், 7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அசைவும் இல்லாமல், ‘அழிந்துவிட்டது’ என கருதப்பட்டு வந்த தப்தான் எரிமலை, தற்போது
திடீரென செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள தப்தான் எரிமலை, 13,000 அடி உயரமுடையது.
கடந்த, 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் இந்த எரிமலையின் உச்சிப் பகுதி, 9 செ.மீ., உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ‘சென்டினல்–1’ செயற்கைக்கோள் எடுத்த படங்களில் இது கண்டுபிடிக்கப்பட்டது.எரிமலையின் ஆழத்தில் சூடான திரவங்கள், வாயுக்கள் குவிவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த, 7 லட்சம் ஆண்டுகளாக செயல்பாடற்று கிடந்த இந்த எரிமலை முன்னதாக ‘அழிந்த எரிமலை’ என வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அது ‘உறங்கும் எரிமலை’ என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
















