லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்​ஜேடி செயல் தலை​வ​ரானார் தேஜஸ்வி

பாட்னா, ஜன. 26- ராஷ்ட்​ரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) செயல் தலை​வ​ராக தேஜஸ்வி யாதவை லாலு பிர​சாத் யாதவ் அறி​வித்​தார். இதை சதி என லாலு மகள் ரோகிணி யாதவ் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். பிஹார் சட்​டப் பேரவை தேர்​தலில் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் கட்சி பல இடங்​களில் தோல்​வியடைந்​த​தால் பின்​னடைவை சந்​தித்​தது. தேர்​தல் நேரத்​தில் லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தெரி​வித்த கருத்​துக்​கள்​தான் தோல்விக்கு காரணம் என கரு​திய தேஜஸ்வி யாதவ், அவருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதையடுத்து ரோகிணி ஆச்​சார்​யா. லாலு வீட்டை விட்டு கோபத்​தில் வெளியேறி​னார்இ ந்​நிலை​யில், ஆர்​ஜேடி கட்​சி​யின் தேசிய செயல் கூட்​டம் பிஹார் தலைநகர் பாட்​னா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் தேஜஸ்வி யாதவை ஆர்​ஜேடி கட்​சி​யின் தேசிய செயல் தலை​வ​ராக லாலு அறி​வித்​தார். அப்​போது ரப்ரி தேவி உட்பட ஆர்​ஜேடி மூத்த தலை​வர்​கள் பலர் உடன் இருந்​தனர்.