
புதுடெல்லி:, மார்ச் 3- ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்பம் உதவியது தெரியவந்துள்ளது. நவீன உலகில் போர் என்பது இனி ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் உள்ளடக்கிய ராணுவம் மட்டுமல்ல. இதன் உண்மையான சக்தி அதன் பின்னணியில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம் என்பது காமேனி கொல்லப்பட்ட சம்பவத்தில் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் ‘சிஐஏ’ மற்றும் இஸ்ரேலின் ‘மொசாட்’ ஆகியவை அந்த இருநாடுகளின் முக்கிய உளவு அமைப்புகள். தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்வது உளவுத் துறைகளுக்கு முக்கியம் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய பதற்றங்கள் இப்போது போர் என உருவெடுத்துள்ளது. இவற்றில் எதிரி நாடுகளால் முக்கியத் தளங்களும் , அதன் தலைவர்களும் குறி வைக்கப்படுகின்றன. இதன் மீது சர்வதேச நிபுணர்கள் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் கூறும் அதிர்ச்சிகுரியத் தகவல்களுக்கு பின் அதிபர் காமேனி கொல்லப்பட்ட விதத்தை எளிதில் அறிய முடிகிறது. நிபுணர்கள் கூற்றுகளின்படி, குறிகளுக்கு பயன்படும் முதல் ஆயுதமாக செயற்கைக்கோள் கண்காணிப்பு முக்கியமாக அமைந்துள்ளது.இன்று உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் செயற்கைக்கோள்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. அவை எந்த ஒரு நாட்டின் தரையில் ஓடும் வாகனங்களின் செயல்பாடுகளையும் நெருக்கமாகக் கண்காணிக்க முடியும். இதில், எந்த வாகனங்கள் எங்கு பயணிக்கின்றன என்பதும், பலசமயம் அவற்றில் பயணிப்பவர்கள் யார் என்றும் கண்டறியப்பட்டு விடுகின்றனர். இந்தவகை கண்காணிப்பின் ஒரு முக்கிய கருவியாக, சிக்னல்கள் மீதான நுண்ணறிவு உள்ளது. இதன்மூலம், தொலைபேசி அழைப்புகள், ரேடியோ சிக்னல்கள், இணைய போக்குவரத்து உள்ளிட்ட பெரும்பாலானவற்றைக் கண்காணித்துவிட முடியும். இந்த முறையில் அதிநவீன உளவுச் சாதனங்களால் திடீரென இயக்கப்பட்ட அல்லது அணைக்கப்பட்ட பகுதியைக் கூடக் கண்டறிய முடியும். இதற்கு பெரும்பாலும், நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன்கள் பயனளிக்கின்றன. இந்த ட்ரோன்களில் வெப் கேமராக்கள், இரவு பார்வை மற்றும் ரேடார் அமைப்புகளின் இயக்கம் போன்றவைக் கண்டறியப்படுகிறது. பழமையான முறையிலான மனித நுண்ணறிவும் உளவிற்காக இன்னும் பயனாகின்றன. தரையில் உள்ள ஆதாரங்கள். உள்தகவல்கள், பாதுகாப்புச் சங்கிலியில் உள்ள பலவீனங்கள் அல்லது நெருங்கிய நெட்வொர்க்கின் கசிவு கண்டறியப்படுகின்றன. இவ்வாறு, மனித ஆதாரங்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பமும் துல்லியமான தகவலை வழங்குகின்றன. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் அல்லது முக்கியத் தலைவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தம் இடங்களை மாற்றுகிறார்கள்
















