பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்

புதுடெல்லி: மார்ச் 3-
நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
தெஹ்ரிக் இ தலிபான் (டிடிபி), பலுச் விடுதலைப் படை (பிஎல்ஏ) ஆகிய பலுச் விடுதலைப் படை (பிஎல்ஏ) ஆகிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் முழு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே எல்லைப் பிரச்சினையும் தீவிரமாகி வருகிறது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர் தொடுப்பதாக கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே அதி தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு களை வீசி வருகின்றன. இதில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
எனினும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்கள், எல்லைப் பகுதிகளில் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாண மக்களில் பெரும்பாலானோர் தலிபான் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் தலிபான் வீரர்கள் எளிதாக முன்னேறி வருகின்றனர். இரு நாடுகளின் எல்லையை வரையறுக்கும் துராந்த் கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தானின் நூர் கான் விமானப் படைத் தளம், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளம், கைபர் பக்துன்வா மாகாணம், முகமது பகுதியில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் நூர் கான் விமானப் படைத் தளம் மீண்டும் சேதமடைந்திருக்கிறது.