Home செய்திகள் தேசிய செய்திகள் போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

புதுடெல்லி, மார்ச் 6- ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து வான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில்,
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கத்தீப்சாதே, “ஈரானும் இந்தியாவும் ஒரே நாகரிக வேர்களைக் கொண்டவை. நாம் இந்தோ-பாரசீக கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கலாச்சார-நாகரிக பாரம்பரியத்துடன் இணங்கும் வகையில், ஈரான்-இந்தியா உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். தற்போது ஈரானின் முக்கிய முன்னுரிமை தாக்குதல் நடத்தும் எதிரிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. அவர்கள் ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.