Home செய்திகள் தேசிய செய்திகள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் – பெண் ஜோதிடர் கணிப்பு

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் – பெண் ஜோதிடர் கணிப்பு

புதுடெல்லி: மார்ச் 7-
ஈ​ரானை இஸ்ரேல் தாக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்​தியா மார்ச் 21-ம் தேதி தாக்​குதல் நடத்தும். ஒன்​றிரண்டு மாதங்​களுக்கு அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை சேமித்து வைத்​துக் கொள்​ளுங்​கள் என்று பெண் ஜோதிடர் ஒரு​வர் கூறி​யுள்ள கருத்து வைரலாகி வருகிறது.ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. பதி​லுக்கு ஈரானும் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அத்​துடன் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தியது பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்தி உள்​ளது. இதனால் மத்​திய கிழக்​குப் பகுதி முழு​வதும் மக்​கள் பீதியில் உள்​ளனர்.
இந்​நிலை​யில், ஈரானை அடுத்து பாகிஸ்​தான் மீது​தான் தாக்​குதல் நடக்​கும். அது​வும் இந்​தியா தாக்​குதல் நடத்​தும் என்று பெண் ஜோதிடர் ஒரு​வர் கணித்​துள்​ளார். தன்னை வேத ஜோதிடர் என்​றும் வாஸ்து நிபுணர் என்​றும் அறி​முகப்​படுத்​திக் கொள்​ளும் அந்த பெண் வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிரகங்​களின் நிலை கிரகங்​களின் நிலைகளை கணக்​கிட்​டுப் பார்க்​கும் போது, மார்ச் 21-ம் தேதி பாகிஸ்​தான் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தும் என்று தெரி​கிறது. எனவே, கையில் ரொக்​கப் பணம், மருந்​துகள், சூரிய மின்​சக்தி சார்​ஜர்​கள், உணவுப் பொருட்​களை ஒன்​றிரண்டு மாதங்​களுக்​குத் தேவை​யான அளவுக்கு சேமித்து வைத்​துக் கொள்​ளுங்​கள். மார்ச் 21-ம் தேதி பாகிஸ்​தானை ஒரு பக்​கம் ஆப்​கானிஸ்​தான் சுற்றி வளைக்​கும். மறு​பக்​கம் இந்​தியா தாக்​குதல் நடத்​தும்.ரம்​ஜான் முடிந்து மார்ச் 19-ம் தேதி நவராத்​திரி தொடங்கு​கிறது. மார்ச் 21-ம் தேதி கிரகங்​களின் நிலைகளைக் கணக்​கிடும் போது தாக்​குதலுக்​கான கூறுகள் தென்படு​கின்​றன. துர்​கா​வின் சக்தி இந்த தேசத்துடன் இருக்​கும். அத்​துடன் பிரதமர் மோடி​யின் மங்கள மகாதசை மற்​றும் கிரகங்​களின் நிலை ஆகியவை தாக்​குதலுக்கு தூண்​டு​கோளாக அமை​யும். எனவே, மார்ச் 21-ம் தேதி வாழ்க்​கை​யில் மறக்க முடி​யாத நாளாக அமைய​போகிறது.இவ்​வாறு அந்​தப்​ பெண்​ ஜோதிடர்​ கூறி​யுள்​ளார்​.