Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

காத்மாண்டு: மார்ச் 9 –
நே​பாளத்​தில் நடை​பெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்​டம் தொடர்​பான அறிக்​கை, இடைக்​ கால அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.
நேபாளத்​தில் அண்​மை​யில் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்தலில் அந்​நாட்​டின் முன்​னாள் பிரதமரும், சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சித் தலை​வரு​மான கே.பி. சர்மா ஒளியை வீழ்த்தி, ராஷ்ட்​ரீய சுதந்​திர கட்​சி​யின் இளம் தலை​வர் பாலேந்​திர ஷா பாலன் (35) வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார்.
கடந்த ஆண்டு ஜென் இஸட் இளைஞர்​களின் போராட்​டத்​தைத் தொடர்ந்து பதவி வில​கிய கே.பி.சர்மா ஒளியை எதிர்த்​து, ஜாப்பா-5 தொகு​தி​யில் ராஷ்ட்​ரீய சுதந்​திர கட்​சி​யின் பிரதமர் வேட்​பாளர் பாலேந்​திர ஷா பாலன் போட்​டி​யிட்​டாா். ‘ராப்’ இசைக் கலைஞ​ரான பாலேந்​திர ஷா பாலன், காத்​மாண்டு நகர மேய​ராக இளைஞர்​களின் நன்​ம​திப்பை ஏற்​கெனவே வென்​றவர். விரை​வில் இவர் பிரதமர் பதவியை ஏற்​க​வுள்​ளார்.
நேபாள அரசின் ஊழல் மற்றும் சமூக ஊடக தடைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்​டம்​பரில் இளைஞர்​கள் (ஜென் இஸட்) போராட்​டத்தில் குதித்தனர். இந்த ஜென் இஸட் போராட்​டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. அரசு கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது மொத்​தம் 76 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து கே.பி.சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நியமிக்கப்பட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கை இந்தப் போராட்டம் தொடர்​பாக உயர்நிலைக் குழு விசா​ரணை நடத்த இடைக்கால அரசு உத்தரவிடப்​பட்டது. அந்த விசா​ரணை முடிந்த நிலை​யில், நேபாள இடைக்​ கால அரசிடம் அறிக்​கையை விசா​ரணை கமிஷன் நேற்று சமர்ப்​பித்​துள்​ளது. சிங்​தர்​பார் பகு​தி​யில் அமைந்​துள்ள பிரதமர் வீட்​டில் இடைக்​கால பிரதமர் சுசீலா கார்​கி​யிடம் இந்த அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரிய வந்​துள்​ளது. இந்த அறிக்கையில் கூறப்​பட்​டுள்ள பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் அடுத்​த கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று எதிர்பார்க்கப்படுகிறது.