
வாஷிங்டன்: மார்ச் 9-
டிரம்ப், இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு தொடங்கி வைத்திருக்கும் ஈரான் போர் காரணமாக, மொத்த உலகமும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 1970களில் எதிர்கொண்ட நெருக்கடியை போலவே இப்போதும் நெருக்கடியை உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன என்று அமெரிக்க செய்தி ஊடகமான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த சூழலில், மீண்டும் எரிபொருள் விலை உயர்ந்தால், அது பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
970களில் என்ன நடந்தது? 1970களில் இரண்டு சம்பவங்கள் நடந்தது. இரண்டும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளை உலுக்கி எடுத்துவிட்டது. முதல் சம்பவம் 1973ல் நடந்தது.
எகிப்து மற்றும் சிரியா தலைமையில் அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. ஆனால், இஸ்ரேலை காப்பாற்ற அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது. எண்ணெய் விலை அதிகரிப்பு இதனால் எரிச்சலடைந்த அரபு நாடுகள், குறிப்பாக சவுதி தலைமையிலான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) மேற்கு நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தடை போட்டது. இந்த தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 மடங்கு அதிகரித்தது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பெட்ரோலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன. இரண்டாவது சம்பவம் இரண்டாவது சம்பவம் நடந்தது 1979ல். இந்த காலத்தில்தான் ஈரானில் புரட்சி வெடித்தது. ஷா மன்னருக்கு எதிராக புரட்சி நடத்தி இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தன. ஆனால், புதிய இஸ்லாமிய அரசு அமெரிக்காவுடன் விரோத போக்கை கடைபிடித்தது. குறிப்பாக ஈரானில் இருந்த அமெரிக்க தூதரர்களை பிணை கைதிகளாக பிடித்தது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று பயந்த மற்ற நாடுகள், அவசர அவசரமாக எண்ணெய்யை சேமிக்க தொடங்கின. இது உலக அளவில் எண்ணெய் விலையை உச்சத்தில் ஏற்றியது. பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது இதுபோன்ற ஒரு நெருக்கடியில்தான் மொத்த உலகமும் சிக்கியிருப்பதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ எச்சரித்துள்ளது.வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொன்னது என்ன? உலக அளவில் நடக்கும் எண்ணெய் போக்குவரத்தில் 20% ஹர்முஸ் நீரினை வழியாகத்தான் நடக்கிறது. இந்த பாதையை ஈரான் முடக்கியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 20%ஐ அதிகரித்திருக்கிறது. உக்ரைன் போருக்கு பிறகு மீண்டும் எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. சவுதி அரேபியா, குவைத், கத்தாரின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் விலை உயர்வை, வெறும் சாதாரண விலை உயர்வு என்று கடந்துவிட முடியாது. இது உலக எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் உடைப்பு என்றும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறியுள்ளது.



















