Home விளையாட்டு மனம் திறக்கும் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர்

மனம் திறக்கும் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர்

அகம​தா​பாத், மார்ச் 10- இந்​திய கிரிக்​கெட் அணி கடந்த மூன்று ஆண்​டு​களில் மூன்று ஐசிசி கோப்​பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக்​ கோப்​பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி,
2026-ம் ஆண்டு டி20 உலகக்​கோப்​பை) வென்​றிருப்​பது ஒரு அசாத்​தி​ய​மான சாதனை என்​ப​தில் சந்​தேகமில்​லை. ஆனால், 1999-2007 கால​கட்​டத்​தில் ஆஸ்​திரேலியா காட்​டிய ஆதிக்​கத்​துடன் ஒப்​பிடும்​போது இந்​திய அணி​யின் பயிற்சி​யாள​ரான கவுதம் கம்​பீர் மிக எதார்த்​த​மான ஒரு பார்​வையை முன்​வைக்​கிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற பின்​னர் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: வெள்ளை பந்து கிரிக்​கெட் குறித்து நான் அதி​க​மாக பேச விரும்​ப​வில்​லை. ஒரு​நாள் போட்டி கிரிக்​கெட்​டில் கடந்த மூன்று தொடர்​களில் இரண்​டில் நாங்​கள் தோல்வியடைந்துள்ளோம். வெள்ளை பந்து கிரிக்​கெட்​டில் சகாப்​தம் படைப்​ப​தாக இருந்​தால் இப்​படி இரண்டு தொடர்​களை இழந்​திருக்க மாட்​டோம். சகாப்​ப​தம் படைப்​பது போன்ற விஷ​யங்​களில் நான் நம்​பிக்கை வைப்​ப​தில்​லை. எந்​தப் போட்​டி​யில் விளை​யாடி​னாலும் தின​மும் முழு முயற்​சி​யுடன் களத்​தில் இறங்க வேண்​டும். நாட்​டிற்​காக விளை​யாடும்​போது ஒவ்​வொரு போட்​டியை​யும் வெல்ல வேண்​டும் என்​பதே வீரர்​களின் இலக்​காக இருக்க வேண்​டும்.
இருதரப்பு போட்டி என்​றாலும், ஐசிசி கோப்பை என்​றாலும், உலகக் கோப்பை என்​றாலும் வேறு​பாடு இல்​லை. ஏனெனில் அனைத்​தும் ஒரே மாதிரி​யாகவே இருக்​கிறது. என்னை பொறுத்​தவரை​யில் அணி​யின் ஓய்​வறை​யில் உள்ள வீரர்​கள் நாட்டை பிர​தி​நி​தித்​து​வம் செய்​வதற்​கான வாய்ப்பை பெற்​ற​தில் மிக​வும் அதிர்​ஷ்ட​சாலிகள். என் இடத்​தில் இருக்க விரும்​பும் ஆயிரக்​கணக்​கான மக்​கள் இருக்​கிறார்​கள். சூர்​யகு​மார் யாதவ் மற்​றும் ஓய்​வறை​யில் உள்ள மற்ற வீரர்​களின் நிலைக்கு வர விரும்​பும் கோடிக்​கணக்​கான குழந்​தைகள் இருக்​கிறார்​கள். எனவே, நாம் எதை​யும் ஒரு​போதும் சாதா​ரண​மாக எடுத்​துக்​கொள்​ளக்​கூ​டாது. முதலில்,
இந்த கோப்​பையை நான் ராகுல் திரா​விட்​டுக்கு அர்ப்பணிக்க வேண்​டும். அதன் பின்​னர் விவிஎஸ் லட்​சுமணுக்கு அர்ப்பணிக்க வேண்​டும். இந்​திய கிரிக்கெட்டை இவ்​வளவு சிறந்த நிலைக்கு கொண்டு வரு​வதற்​காக ராகுல் திரா​விட் செய்த சாதனை​களுக்கு ந ன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். பிசிசிஐ சிறப்பு மையத்​தில் தனது பணி காலத்​தில் அவர், செய்த அனைத்​துக்​கும் நன்றி கூறிக்​கொள்​கிறேன்.
ஏனெனில் பிசிசிஐ சிறப்பு மையம் இந்​திய கிரிக்​கெட்​டின் மிக முக்​கிய​மான பயிற்சி வழி​முறை​யாக இருக்​கிறது. ஜெய் ஷாவிற்கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். எனது பணி கால​கத்​தில் மோச​மான தருணங்​களை சந்​தித்த போது யாரும் என்னை அழைத்து பேசி​யது கிடை​யாது.
ஆனால் நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்க தொடர்​களுக்கு பின்​னர் ஜெய் ஷா என்னை அழைத்து பேசி​னார். என் மீது நம்​பிக்கை வைத்த அவருக்கு நன்​றி. சூர்​யகு​மார் யாத​விடம் எனது எளிமை​யான கொள்கை குறித்து பேசுவேன். எப்​போதும் தனிப்​பட்ட சாதனை​களை விட, கோப்​பைகளே முக்​கி​யம்.