Home செய்திகள் தேசிய செய்திகள் உ.பி. இளைஞரின் ‘உயிர் காக்கும் கருவிகளை’ அகற்ற அனுமதி

உ.பி. இளைஞரின் ‘உயிர் காக்கும் கருவிகளை’ அகற்ற அனுமதி

புதுடெல்லி, மார்ச் 11- உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கோமாவில் உள்ள நிலையில் அவரது அனுமதி கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு பொருத்தப்பட்டுள்ள உயிர் காக்க உதவும் கருவிகளை அகற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹரீஷ் ராணாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளின் உதவியுடன் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார். சுவாசிக்க tracheostomy குழாயும், உணவு அளிக்க gastrojejunostomy குழாயும் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே அவர் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.