Home செய்திகள் உலக செய்திகள் புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: மே 1 –
புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று ஒரு புகைப்​படத்தை பதி​விட்​டார். அதில் அவர் கையில் அதிநவீன துப்​பாக்​கி​யுடன் நிற்​கிறார். மலை சூழ்ந்த பின்​புறத்​தில் வெடிகுண்​டு​கள் வெடித்​துச் சிதறுகின்​றன.
இந்த புகைப்​படத்​துடன் அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், “அணு சக்தி தொடர்​பான ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் தொடர்ந்து மறுத்து வரு​கிறது. அந்த நாடு விரை​வில் புத்​தி​சாலித்தன​மான முடிவை எடுக்க வேண்​டும். இனிமேல் பொறுமை காக்க முடி​யாது. தொடர்ந்து நல்​ல​வ​னாக இருக்க மாட்​டேன்” என்று தெரி​வித்​தார்.
சில மணி நேர இடைவெளி​யில் அவர் வெளி​யிட்ட மற்​றொரு பதி​வில், ”புயல் வந்து கொண்​டிருக்​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது” என்று தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்த அமெரிக்க ராணுவம் தயா​ராகி வரு​கிறது. குறிப்​பாக ஈரானின் எரிசக்தி நிலை​யங்​கள் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.
ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்​பற்​ற​வும் வியூ​கம் வகுக்​கப்​பட்டு இருக்​கிறது. ஈரானில் தரை​யிறங்கி அந்த நாட்​டில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை பறி​முதல் செய்​ய​வும் ரகசிய திட்​டம் தீட்​டப்​பட்டு இருக்​கிறது. இதுதொடர்​பாக அமெரிக்க ராணுவ தளப​தி​கள் அதிபர் டொனால்டு ட்ரம்​பிடம் விரி​வான ஆலோ​சனை நடத்தி உள்​ளனர். இதை சுட்​டிக்​காட்​டும் வித​மாகவே புயல் வந்து கொண்​டிருக்​கிறது என்று ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இவ்​வாறு அந்த வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ட்ரம்ப், புதின் பேச்​சு​வார்த்தை ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்பாஸ் அராக்சி அண்​மை​யில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் புதினும் நேற்று முன்​தினம் தொலைபேசி​யில் ஈரான் விவ​காரம் குறித்து ஆலோ​சித்​தனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “ஈரானிடம் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் விவ​காரத்​தில் ரஷ்யா உதவி செய்​யும் என்று அதிபர் புதின் வாக்​குறுதி அளித்​தார்.
அவரது உதவியை ஏற்​றுக் கொள்ள தயா​ராக இருக்​கிறோம். உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக​வும் அதிபர் புதினுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினேன்” என்றார். ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ், நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “ரஷ்​யா​வின் வெற்றி தினமான மே 9-ம் தேதி ரஷ்​யா, உக்​ரைன் போர் நிறுத்​தம் குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்று ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இவை வெறும் ஊகங்​கள் மட்​டுமே. ஈரானின் அணு சக்தி திட்​டம் தொடர்​பாக ரஷ்ய தரப்​பில்​ எந்​தவொரு பரிந்​துரை​யும்​ அமெரிக்​கா​விடம்​ அளிக்​கப்​பட​வில்​லை” என்​று தெரிவித்​தார்​.