
புதுடெல்லி: மார்ச் 11-
கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானின் சக்வால் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது முரித் விமானப்படைத் தளம். இது, அந்நாட்டின் மிக முக்கியமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கியது.
கடந்த 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானின் 10 விமானப்படைத் தளங்கள் நிலைகுலைந்தன. அதில் முரித் தளமும் ஒன்று. தாக்குதலுக்குப் பிறகு அத்தளம் தார்பாய்களால் மூடப்பட்டு, ரகசியமாகப் பழுதுபார்க்கப்பட்டு வந்தது.

















