
ஸ்ரீநகர்: மார்ச் 12-
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவருக்கு மிக அருகே வந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சரியான நேரத்தில் செயல்பட்ட என்ஜிஏ படைகள் பரூக் அப்துல்லாவை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான ஃபரூக் அப்துல்லா (88), கடந்த புதன்கிழமை மாலை ஜம்முவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது தான் அவரை குறிவைத்து கொலை முயற்சி நடைபெற்றது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாயிண்ட் பிளாங் எனப்படும் மிக அருகில் இருந்து அவரை சுட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை முயற்சி அதாவது அப்துல்லாவிற்கு மிக அருகில் சென்று அந்த நபர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அப்துல்லாவை சுட முயன்றான். ஆனால், தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் இதைப் பார்த்தவுடன், அவர்கள் அந்த நபரைத் தள்ளிவிட்டனர். அதற்குள் அந்த நபர் துப்பாக்கியைச் சுட்டுவிட்டாலும் கூட, அந்த குண்டு அப்துல்லாவை தாக்காமல் வேறு எங்கேயோ போனது.. கொலை முயற்சியில் இருந்து அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அப்துல்லாவை நோக்கி அந்த நபர் வருவதும் அருகே வந்தவுடன் துப்பாக்கிச் சூடு நடத்த முயல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. நொடியும் தாமதிக்காமல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் சரியான நேரத்தில் இதில் தலையிட்டதே அப்துல்லாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அவர்கள் ஒரு நொடி தாமதித்திருந்து இருந்தாலும் விபரீதம் நடந்து இருக்கும். துப்பாக்கிச் சூடு இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற அந்த நபரை அங்கிருந்தவர்கள் தாக்கினர். பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி, 65 வயதான கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். ஜம்முவின் புராணாஸ் மாண்டியைச் சேர்ந்த கமலை அங்குள்ளவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

















