Home செய்திகள் தேசிய செய்திகள் போர் மூண்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை உயர்வது ஏன்?

போர் மூண்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை உயர்வது ஏன்?

புதுடெல்லி: மார்ச் 12-
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரண​மாக இந்தி​யா​வில் காஸ் சிலிண்​டர் விலை கடந்த 7-ம் தேதி உயர்த்தப்பட்​டது. டெல்​லி​யில் மானி​யம் இல்​லாத சிலிண்​டருக்கு (14.2 கிலோ) ரூ.913-ஆக உயர்த்​தப்​பட்​டது. அதே​போல் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர்​கள் விலை​யும் ரூ.1,883-ஆக அதிகரித்​தன.
இந்​தி​யா​வில் 33 கோடிக்​கும் அதி​க​மான வீடு​களில் சமையல் காஸ் சிலிண்​டர் ​(எல்​பிஜி) பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. தற்போது ஈரான்​-
இஸ்​ரேல் போர் தீவிரமடைந்து வரு​வ​தால் அங்கிருந்து வரும் சப்ளை முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்டு விட்​டது.
கத்​தார் உள்​ளிட்ட நாடு​களில் இருந்து இந்​தி​யா​வுக்கு வரும் சமையல் காஸ் விநி​யோகம் முற்​றி​லும் குறைந்​து​விட்​ட​தால், எல்பிஜி விலை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.நமது நாட்​டின் மொத்த எல்​பிஜி தேவை​யில் சுமார் 60% அளவுக்கு இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கத்​தார், ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, குவைத் போன்ற மத்​திய கிழக்கு நாடு​களில் இருந்து இந்தி​யா​வுக்கு இறக்​குமதி செய்​யப்​பட்டு விநி​யோகம் செய்யப்படுகிறது. இந்த நாடு​களில் இருந்து கச்சா எண்ணெயானது மிகப்​பெரிய சரக்​குக் கப்​பல்​கள் மூலம் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரப்​படு​கிறது.தற்​போது போர் மூண்​டுள்​ள​தால் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இயக்​கப்​படும் கப்பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தும் என எச்​சரித்​துள்​ள​தால் அந்​தக் கப்​பல்​கள் அங்​கேயே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. இதனால் இந்தி​யா​வில் எல்​பிஜி சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம் நெருங்​கி​யுள்​ளது.நமது
நாட்​டில் உள்​நாட்டு எல்​பிஜி சிலிண்​டர் நுகர்வு கடந்த பத்தாண்​டு​களில் மிக​வும் உயர்ந்​துள்​ளது. 2016- 17ம் ஆண்​டில் 21.61 மில்​லியன் டன்​னில் இருந்து நிதி​யாண்டு 2025ல் 31.32 மில்லியன் டன்​களாக நுகர்வு உயர்ந்​துள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக, இந்​தி​யா​வின் எல்​பிஜி பயன்​பாடு 10 ஆண்​டு​களில் கிட்​டத்​தட்ட 43% அதிகரித்துள்ளது.