
துபாய், மார்ச் 12- சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இருந்தது. இந்நிலையில் 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணிக்கு சமார் ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரை இறுதியில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு முறையே ரூ.9.24 கோடி, ரூ.8.96 கோடி கிடைத்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ரூ.4.95 கோடியும், பாகிஸ்தான் அணிக்கு ரூ.4.81 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணி ரூ.4.52 கோடியையும், இலங்கை அணி ரூ.4.38 கோடியையும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறிய ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய அணிகள் தலா ரூ.2.85 கோடியை பரிசாக பெற்றுள்ளன.





















