Home செய்திகள் தேசிய செய்திகள் “கட​வுள் கருணை​யால் உயிர் தப்​பினேன்” – ஃபரூக் அப்துல்லா கருத்து

“கட​வுள் கருணை​யால் உயிர் தப்​பினேன்” – ஃபரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர், மார்ச் 13- கட​வுளின் கருணை​யால் உயிர் தப்​பினேன் என்று ஜம்​மு-​காஷ்மீர் முன்​னாள் முதல்​வரும், தேசிய மாநாட்​டுக் கட்​சித் தலை​வரு​மான ஃபரூக் அப்​துல்லா தெரி​வித்​தார். ஜம்​மு​வின் கிரேட்​டர் கைலாஷ் பகு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் ஃபரூக் அப்​துல்​லா​வும், துணை முதல்​வர் சுரீந்​தர் சவுத்​தரி​யும் பங்​கேற்​று​விட்டு புறப்​படத் தயா​ரா​யினர். அப்​போது, ஃபரூக் அப்​துல்​லா​வின் பின்​னால் இருந்து வந்த ஒரு நபர் கைத்​துப்​பாக்​கி​யால் அவரை நோக்கி சுட்​டார். உடனே, பாது​காப்​பு அதி​காரி​கள் அந்த நபரை மடக்​கிப் பிடித்​தனர். இதனால், குண்டு குறிதவறிச் சென்​றது. இதையடுத்து நூலிழையில் ஃபரூக் அப்​துல்லா உயிர் தப்​பி​னார். இதுகுறித்து நேற்று செய்​தி​யாளர்​களிடம் ஃபரூக் அப்​துல்லா கூறிய​தாவது: கடவுளின் கருணை​யால் நான் உயிர் தப்​பினேன். திருமண நிகழ்ச்​சி​யில் துப்​பாக்​கி​யால் சுடப்​பட்ட விவரம் கூட எனக்​குத் தெரி​யாது. அந்​தத் தாக்​குதலில் இருந்து கடவுள்​தான் என்​னைக் காப்​பாற்​றி​யுள்​ளார். திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பின்​னர் வீட்​டுக்கு புறப்​பட்​டுக் கொண்​டிருந்​தேன். அப்​போது எனது பின்​பக்​கமிருந்து ஒரு பெரிய சத்​தம் கேட்​டது. திருமண விழா என்​ப​தால் பட்​டாசு வெடிக்​கிறார்​கள் என்று நினைத்​தேன். அப்​போது ஒரு​வர் என் அருகே தடு​மாறி விழுந்​தார். அப்​போது கூட எனக்கு என்ன நடக்​கிறது என்று தெரிய​வில்​லை. அதன் பின்​னர்​தான் துப்​பாக்​கி​யால் அந்த நபர் சுட முயன்ற விஷ​யம் தெரிய​வந்​தது. அவர் யார் என்​பது தெரிய​வில்​லை. ஜம்​மு-​காஷ்மீரில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு நடந்து வரும் நிலை​யிலும், மாநில அந்​தஸ்தை மத்​திய அரசு இது​வரை திருப்​பித்தரவில்​லை. எனவே, மாநில அந்​தஸ்தை திருப்​பியளிப்​ப​தோடு, மாநிலத்​துக்​கான அதி​காரங்​களை​யும் திரும்ப வழங்க வேண்​டும். ஜம்​மு-​காஷ்மீரில் தேர்​தலுக்​குப் பின்​னர் மாநில அந்​தஸ்து திருப்பி அளிக்​கப்​படும் என்ற உறு​தியை மத்​திய அரசு அளித்​தது. ஆனால் அரசு தேர்வு செய்​யப்​பட்டு சில ஆண்​டு​கள் கடந்த பின்​னரும் இன்​னும் மத்திய அரசு தனது வாக்​குறு​தி​யைக் காப்​பற்​ற​வில்​லை. இது சரியல்ல. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ஜம்​முவை சேர்ந்​தவர்: துப்​பாக்​கி​யால் சுட்ட விவ​காரத்​தில் கைதானவர் ஜம்​முவைச் சேர்ந்த 63 வயதான கமால் சிங் ஜம்​வால் என்​றும், அவரிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட துப்​பாக்​கிக்கு உரிமம் இருப்​ப​தாக​வும் ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதில் தீவிர​வாத அமைப்​புக்கு சம்​பந்​தம்​ இல்​லை என்​று போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.