Home செய்திகள் தேசிய செய்திகள் 15% உணவகங்கள் மூடல்

15% உணவகங்கள் மூடல்

சென்னை: மார்ச் 13-
வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர் தட்​டுப்​பாட்​டால், தமிழகத்​தில் 15 சதவீதம் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக தமிழக ஹோட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்​ளச்​சந்​தை​யில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்​துள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் தீவிரத்​தால், மத்​திய கிழக்கு நாடு​களில் எண்​ணெய் மற்​றும் எரிவாயு உற்​பத்​தி, விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், திரவ பெட்​ரோலி​யம் எரி​வாயு (எல்​பிஜி) விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்​டருக்கு முன்​னுரிமை அளிப்​ப​தற்​காக, வர்த்தக சிலிண்டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, சென்னை உட்பட பல நகரங்​களில் உணவு​களை தயாரித்து வழங்​கும் ஹோட்டல்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.
ஹோட்​டல்​களில் விற்​கப்​படும் உணவு வகை​களின் எண்​ணிக்​கை​யும் குறைக்​கப்பட்​டுள்​ளது. இதுத​விர, வணிக சிலிண்டர் இல்​லாத​தால், ஓட்​டல்​களும் மூடப்​பட்​டுள்​ளன.