Home மாவட்டங்கள் பெங்களூர் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை

எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: மார்ச் 14-
முழு நேர​மாக பணி​யாற்​று​வ​தால் மாதாந்​திர ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்று அரசுப் பள்ளி எல்​கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.
ஊதிய உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, பணிநிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி தமிழ்​நாடு முன்​பரு​வக்​கல்வி ஆசிரியர்கள் நலச்​சங்​கம் சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.அப்​போது அந்த அமைப்​பின் மாநிலத் தலை​வர் ஆர்​.லட்​சுமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஊராட்சி ஒன்​றிய தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் கடந்த 2022-23-ம் கல்​வி​யாண்டு முதல் 2,381 முன்​பரு​வக் கல்வி ஆசிரியர்கள் (எல்​கேஜி, யுகேஜி) பணி​யாற்றி வரு​கிறோம்.
எங்​கள் நியமனத்​துக்​குப் பிறகு அரசுப் பள்​ளி​களில் ஒன்​றாம் வகுப்​பு​களில் மாணவர் சேர்க்கை அதி​கரித்​துள்​ளது. இதை தொடக்​கக் கல்வி அதி​காரி​களே உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர்.
தின​மும் காலை 9 மணி​முதல் மதி​யம் 12.45 மணிவரை பணி நேரம் என்​றாலும், பெற்​றோர் மற்​றும் தலைமை ஆசிரியர்கள் விருப்​பத்​துக்கு ஏற்ப மாலை 4 மணிவரை முழுநேர​மும் பணி​யாற்​றுகிறோம். எங்​களுக்கு மாத ஊதி​ய​மாக ரூ.5 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. சாதாரண கூலி வேலைக்​குச் செல்​வோர் கூட தின​மும் ரூ.600 பெறுகிறார்​கள். ஆனால், கல்வி வளர்ச்​சிக்​காக பணி​யாற்​றும் எங்​களின் ஊதி​யம் மிக​வும் குறை​வாக உள்​ளது. இந்த ஊதி​யம் எங்​களின் குடும்ப வாழ்​வா​தா​ரத்​துக்கு போது​மான​தாக இல்​லை.
எனவே, எங்​களின் குடும்ப நலனை கருத்​தில்​கொண்டு ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும். அதோடு மே மாத​மும் ஊதி​ய​மும் தர வேண்​டும். மாதாந்​திர ஊதி​யத்தை ஆசிரியர்​களின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக வரவு வைக்க வேண்​டும்.
எங்​களில் பெரும்​பாலானோர் பெண் ஆசிரியர்கள். எனவே, குறைந்​த​பட்​சம் 3 மாத​காலம் மகப்​பேறு விடுப்பு வழங்க வேண்​டும். நாங்​கள் முழுநேர​மாக பணி​யாற்றி வரு​வ​தால் எங்​களை பணிநிரந்​தரம் செய்ய அரசு முன்​வர வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.