Home செய்திகள் தேசிய செய்திகள் கடும் பனிப்பொழிவால் மீட்புப் பணியில் சிரமம்

கடும் பனிப்பொழிவால் மீட்புப் பணியில் சிரமம்

மணாலி, மார்ச் 16- இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன. காலையில் மணாலியிலிருந்து லாஹால் பள்ளத்தாக்கு மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற வாகனங்கள், மாலை நேரத்தில் மணாலி திரும்ப முயன்றபோது அடல் சுரங்கப்பாதையின் தெற்குப் பகுதியில் சிக்கிக்கொண்டன. சாலைகளில் அதிகப்படியான பனி படிந்ததால் வாகனங்கள் வழுக்கத் தொடங்கின. இதனால் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் மணாலி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.