Home மாவட்டங்கள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

பெங்களூரு: மார்ச் 17 –
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான போட்டிகளை பெங்​களூரு எம்​.சின்னசாமி மைதானத்​தில் நடத்​திக் கொள்ள கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் மற்​றும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது கர்​நாடக மாநில அரசு.
ஐபிஎல் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதன் தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.
எனினும் பெங்​களூரு​வில் நடை​பெற​விருக்​கும் ஐபிஎல் போட்​டிகள், கர்​நாடக அரசால் அமைக்​கப்​பட்ட நிபுணர்
குழு​வின் ஒப்​புதலுக்கு உட்​பட்​டவை என பிசிசிஐ தெரி​வித்​திருந்​தது. கடந்த ஆண்டு ஆர்​சிபி அணி முதன்​முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து நடை​பெற்ற வெற்றி கொண்​டாட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் உயி​ரிழந்​திருந்​தனர். இதன் பின்​னர் மைதானத்​தில் சர்​வ​தேச தரத்​திலான பாது​காப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​படும்
வரை அங்கு போட்​டிகள் நடத்த கர்​நாடக அரசு தற்​காலிக தடை விதித்​திருந்​தது.
இதனால் ஆர்​சிபி அணி​யின் போட்​டிகள் மீண்​டும் பெங்​களூரு​வில் நடத்​தப்​படு​மா? அல்​லது வேறு மைதானத்​துக்கு மாற்​றப்​படு​மா? என்ற சந்​தேகங்​கள் எழுந்​தன. இதற்​கிடையே ஆர்​சிபி அணி நிர்​வாகம் மாற்று ஏற்​பா​டாக ராய்ப்​பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​களை முன்​னெடுத்​தது. இதுஒரு​புறம் இருக்க கர்​நாடக கிரிக்​கெட் சங்​க​மும், ஆர்​சிபி அணி​யும் ஐபிஎல் போட்​டிகளின் போது சின்​ன​சாமி மைதானத்​தில் உயர்​மட்ட அளவி​லான பாது​காப்​பு​களை வழங்​கு​வதற்​கும், ரசிகர்​களுக்கு கூடு​தல் வசதி​களை ஏற்​படுத்​திக் கொடுக்​க​வும் முன்​வந்​தன. இதையடுத்து
மைதானத்​தில் செய்​யப்​பட்​டுள்ள கூடு​தல் பாது​காப்பு அம்​சங்​களை கர்​நாடக அரசு நியமித்த நிபுணர்​குழு கடந்த 13-ம் தேதி ஆய்வு செய்​தது.
அப்​போது போட்டி நடை​பெறும் நாளன்று செய்​யப்​படும் அனைத்து ஏற்​பாடு​களும் ஒரு முழு அளவி​லான ஒத்​திகை மூலம் செய்து காண்​பிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்​பான விரி​வான அறிக்​கையை நிபுணர் குழு, கர்​நாடக அரசிடம் வழங்​கியது. இந்​நிலை​யில் கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஸ்​வரா தலை​மை​யில் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.