Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: மார்ச் 18 –
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.
தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்து விட்​டன. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.
இந்​நிலை​யில், தேர்​தல் தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:
தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் தேர்​தல் செல​வினங்​கள் உன்​னிப்​பாக கண்​காணிக்​கப்​பட்​டு, பதிவு செய்​யப்​படு​கின்​றன. ஒரு வேட்​பாளர் அதி​கபட்​சம் ரூ.40 லட்​சம் வரை மட்​டுமே தேர்​தல் சம்​பந்​த​மான பணி​களுக்​காகச் செலவு செய்ய முடி​யும்.
தேர்​தல் நடை​முறை​களை தீவிர​மாகக் கண்​காணிக்க 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் மட்​டுமல்​லாமல் 25 துறை சார்ந்த கண்​காணிப்​புக் குழுக்​களும் இடம்​பெற்​றுள்​ளன. இதில் வரு​மான வரித் துறை, அமலாக்​கத் துறை, சுங்​கத் துறை உள்​ளிட்ட துறை​களும் அடங்​கும்.
தற்​போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்​கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இக்​கண்​காணிப்​புக் குழுக்​கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்டு விசா​ரணை நிலை​யில் உள்​ளன.
பொது​மக்​கள் புகார் தெரி​விப்​ப​தற்கு வசதி​யாக, ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட தேர்​தல் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் அளிக்​கும் புகார்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.தமிழகம் முழு​வதும் நேற்று காலை வரை 1.68 லட்​சம் சுவர் விளம்​பரங்​கள் நீக்​கப்​பட்டு 61 இனங்​களில் குற்​ற​வியல் நடவடிக்கை தொடர்​வதற்​காக முதல் தகவல் அறிக்கை பதி​யப்​பட்டு தொடர் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.