Home செய்திகள் தேசிய செய்திகள் படிப்பை பாதியில் விட்ட லயோலா கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழ் பெற்ற விஜய்

படிப்பை பாதியில் விட்ட லயோலா கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழ் பெற்ற விஜய்

சென்னை: மே 5-
நடிகரும், தவெக தலைவருமான விஜய், தான் படித்த கல்லூரியிலேயே இன்று வெற்றிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் படித்து, பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஜய். இன்று தான் படித்த அதே லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று தனது வெற்றிச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 108 இடங்களில் தவெக வெற்றி முகத்தில் உள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 1,12,127 வாக்குகள் பெற்று வென்றார் விஜய். திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 62372 வாக்குகளையும், பாமக வேட்பாளர் திலகபாமா 8085 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் வெற்றி தமிழன் 4827 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கருத்துக் கணிப்புகளும் பெரம்பூரில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு என சொல்லப்பட்ட நிலையில் விஜய் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார் தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல்முறையாக இன்று மாலை 5.30 மணியளவில் தமது நீலாங்கரை இல்லத்தில் இருந்து அடையாறு இல்லத்தில் உள்ள பெற்றோரை சந்திக்க தவெக தலைவர் விஜய் சென்றார்.
அங்கு பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவிடம் ஆசி பெற்ற விஜய், வீட்டின் பால்கனியில் இருந்தவாறு வீட்டின் முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொண்டர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் அடையாறில இருந்து புறப்பட்ட விஜய், லயோலா கல்லூரிக்கு சென்றார். அங்கு, பெரம்பூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அவர் பெற்றார்.
வர் செல்லும் வழிநெடுங்கிலும் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் குவிந்ததால் அவர் செல்லும் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.