Home செய்திகள் தேசிய செய்திகள் சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

மும்பை, மார்ச் 20- மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கடும் சரிவை சந்​தித்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போர் உச்​சகட்​டத்தை எட்​டியுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் வளங்​கள் குறி​வைத்து தாக்​கப்​படு​வ​தால் உலகள​வில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்​கா-இஸ்​ரேல் கூட்​டணி ஈரான் மீது நடத்​திய தாக்​குதலால் கச்சா எண்​ணெய் விநி​யோகம் உலகள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச சந்​தை​யில் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை நேற்று காலையில் 7 சதவீதம் உயர்ந்​து, ஒரு பேரல் 114 டாலரை நெருங்கியது. பின்னர் சற்று குறைந்து வர்த்தகமானது. கச்சா எண்​ணெய் விலை உயர்வு இந்​தி​யா​வில் பணவீக்​கம் அதிகரிக்​கும் என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. ரூபாய் மதிப்பு கடும் சரிவு: அந்​நிய முதலீடு​கள் வெளி​யேற்​றம், கச்சா எண்​ணெய் விலை உயர்​வால், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்​தித்​துள்​ளது. நேற்​றைய வர்த்​தகத்​தில் ஒரு டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ரூ.93.25 அளவுக்கு வீழ்ச்​சி​யடைந்தது. மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 2,497 புள்​ளி​கள் வீழ்ச்​சி​யடைந்து 74,207-ல் நிலைபெற்​றது; நிஃப்டி 776 புள்​ளி​கள் சரிவடைந்து 23,002-ல் நிலைகொண்​டது. இதன் காரண​மாக, நேற்று ஒரேநாளில் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.12 லட்​சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​ட​தாக புள்​ளி​விவரங்​கள்​ தெரிவிக்​கின்றன. எச்டிஎப்சி தலைவர்.. இதற்கிடையில், நிர்​வாக நடை​முறை​களில் அதிருப்தி தெரி​வித்து எச்டிஎப்சி வங்கித் தலை​வர் அதானு சக்​ர​வர்த்தி ராஜி​னாமா செய்​ததை அடுத்​து, அந்த வங்​கி​யின் பங்​கு​கள் வர்த்​தகத்​தின்​போது 9 சதவீதம் சரிந்து ரூ.772 என்ற ஓராண்டு காலக் குறைந்​த​பட்ச விலை​யைத் தொட்​டது. இது​வும் சந்​தை​யின் சரிவுக்கு முக்​கியக் காரணி​யாக அமைந்​தது.