Home மாவட்டங்கள் பெங்களூர் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்

ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: மார்ச் 21 –
ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள்.
ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை நிறுத்தி விரதம் இருப்பார்கள். மாலை நேரத்தில் இப்தார் விருந்தாக உணவு எடுத்து கொள்வார்கள். ரம்ஜான் கொண்டாட்டம் இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் ரமலான் நோன்பு தமிழகத்தில் தொடங்கியது. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வந்தனர். ஒரு மாதம் வரை நோன்பு காலம் இருக்கும். அதன்பிறகு இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்கும்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரம்ஜான் பண்டிகை வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்படும். நேற்று முன்தினம் வானில் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் பிறை தெரியவில்லை. இதையடு்து இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஆனால் தமிழகம் உள்பட இந்தியாவின் பிற இடங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலையிலேயே தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து கூறி வருகின்றனர்.