Home மாவட்டங்கள் பெங்களூர் செல்போனை வைக்க தனி அறை

செல்போனை வைக்க தனி அறை

சென்னை: மார்ச் 23-
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு வெளியே வாக்​காளர்​கள் செல்​போனை பாதுகாப்பாக வைத்​து​விட்டு செல்​ல​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்பட உள்​ளது.
இதுதொடர்​பாக இந்​தியத் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 6 மாநிலங்​களில் இடைத் தேர்​தல்​களுக்​கான அட்​ட​வணை கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இத்​தேர்​தலை​யொட்​டி, வாக்​குச் சாவடிகளில் ஒவ்​வொன்​றி​லும் உறுதி செய்​யப்​பட்ட குறைந்​த​பட்ச வசதி​கள் செய்யப்​படு​வதை உறுதி செய்ய ​மாநிலங்​களின் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.
அதன்​படி, உறுதி செய்​யப்​பட்ட குறைந்​த​பட்ச வசதி​களான குடிநீர், நிழலுடன் கூடிய காத்​திருப்​புப் பகு​தி, தண்​ணீர் வசதி​யுடன் கூடிய கழிப்​பறை, போதிய வெளிச்​சம், மாற்​றுத் திற​ன்வாக்​காளர்​களுக்​கான முறை​யான சாய்​வுதளம், தரப்​படுத்​தப்​பட்ட வாக்​குப்​ப​திவு அறை மற்​றும் முறை​யான வழி​காட்டி பலகைகள் ஆகியவை இடம்​பெற வேண்​டும்.
வாக்காளர்கள் உட்கார பெஞ்ச்: வாக்​காளர்கள் தங்​களது முறைக்​காக காத்​திருக்​கும் போது அமரு​வதற்கு ஏதுவாக, வரிசை​யில் குறிப்​பிட்ட இடைவெளி​களில் பெஞ்​சுகள் அமைக்​க​வும் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களிடம் கோரப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் விழிப்​புணர்வை வலுப்​படுத்த, அனைத்து வாக்​குச்சாவடிகளி​லும் 4 சீரான மற்​றும் தரப்​படுத்​தப்​பட்ட வாக்​காளர் வசதி சுவரொட்​டிகள் முக்​கிய​மாக காட்​சிப்படுத்​தப்​படும்.