Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியக் குழு அமெரிக்கா பயணம்

இந்தியக் குழு அமெரிக்கா பயணம்

புதுடெல்லி: ஏப்ரல் 16-
அமெரிக்க அதி​காரி​களு​டன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக முக்கிய அதி​காரி​கள் அடங்​கிய உயர் மட்​டக் குழு அடுத்த வாரம் வாஷிங்​டன் செல்​ல​வுள்​ள​தாக அதி​காரப்​பூர்வ வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.
இதுகுறித்து அந்த வட்​டாரங்​கள் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இந்தியா மற்​றும் அமெரிக்கா இடையே இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தத்​திற்​கான கட்​டமைப்​பு​கள் ஏற்​கெனவே இறுதி செய்யப்பட்டுள்ள நிலை​யில், இரு நாட்டு வர்த்தக அதி​காரி​களுக்கு இடையிலான இந்த இருதரப்பு சந்​திப்பு மிகுந்த முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. இந்த வர்த்தக ஒப்​பந்​தம் முதலில் கடந்த மார்ச் மாதமே கையெழுத்​தாக வேண்​டி​யிருந்​தது.
எனினும், அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பைத் தொடர்ந்து அந்​நாட்​டின் இறக்​குமதி வரி விதிப்பு முறை​களில் ஏற்​பட்ட மாற்​றங்​களால் சூழல் மாறி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் புதிய உலகளா​விய வரி விதிப்​புக் கட்​டமைப்பு நடை​முறைக்கு வந்​தவுடன், இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று முன்​ன​தாகத் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.கடந்த பிப்​ர​வரி மாதத்​தில், இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதற்​கட்ட கட்​டமைப்பை இறுதி செய்​த​தாக இரு நாடு​களும் அறி​வித்​தன. அந்த உடன்​படிக்​கை​யின்​படி, இந்​தியா மீதான இறக்​குமதி வரி​களை 18 சதவீத​மாகக் குறைக்க அமெரிக்கா ஒப்​புக்​கொண்​டிருந்​தது. ஆனால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பின் வரி விதிப்பு முறை​களுக்கு எதி​ராக அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​ததையடுத்து, வரி விதிப்​புக் கொள்கை மாறி​யுள்​ளது.