Home மாவட்டங்கள் பெங்களூர் தானியங்கி கதவுகளுடன் ரயில்

தானியங்கி கதவுகளுடன் ரயில்

சென்னை: ஏப்ரல் 16-
ஐசிஎஃப் ஆலை​யில் தானி​யங்கி கதவு​களு​டன் தயாரிக்​கப்​பட்ட முதல் மின்​சார ரயில் மும்​பைக்கு அனுப்​பப்​பட்​டது. சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, டெல்லி ஆகிய நகரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​களில் நாள்​தோறும் லட்​சக்​கணக்​கானோர் பயணம் செய்​கின்​றனர்.இருப்​பினும், அலு​வலக நேரங்​களில் (பீக் ஹவர்) ஏற்​படும் நெரிசல், ரயில் படி​யில் தொங்​கியபடி பயணம் செய்து தவறி விழும் சம்​பவங்​களும் நிகழ்​கின்​றன.இதை தவிர்க்க, தானி​யங்கி கதவு​களு​டன் கூடிய புதிய மின்​சார ரயில்​களைத் தயாரிக்க ரயில்வே வாரி​யம் முடிவு செய்​தது. அதற்​கேற்ப புதிய வடிவ​மைப்பை தயாரித்து வழங்​கும் பணி சென்​னை​யில் உள்ள ஐசிஎஃப் ஆலை​யிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்​ப டைக்​கப்​பட்​டது.அதன் தொடர்ச்​சி​யாக, தானி​யங்கி கதவுடன் கூடிய முதல் ரயிலை தயாரிக்​கும் பணி கடந்த ஆண்டு இறு​தி​யில் தொடங்​கியது. இப்​பணி கடந்த மாதம் முடிவடைந்​தது. பலகட்ட சோதனைக்​குப் பிறகு, இந்த ரயில் மும்​பைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.இதுகுறித்து ஐசிஎஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: மும்​பை, சென்​னை​யில்​தான் அதிக அளவில் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.தின​மும் பல லட்​சம் பேர் பயணிக்​கும் நிலை​யில், அலு​வலக நேரங்​களில் 10 நிமிடங்​கள் ரயில் தாமதம் ஆனாலும், ரயில்​களில் அதிக அளவில் நெரிசல் ஏற்​படு​கிறது.எனவே, நெரிசல் மிகுந்த நேரங்​களில் கூடு​தல் மின்​சார ரயில்​களை இயக்க அனைத்து மண்​டலங்​களுக்​கும் ரயில்வே அறி​வுறுத்​துகிறது.