Home செய்திகள் தேசிய செய்திகள் மறுவரையறையால் ‘பிஓகே’ திரும்ப கிடைக்கும்: பாஜக தலைவர் கருத்து

மறுவரையறையால் ‘பிஓகே’ திரும்ப கிடைக்கும்: பாஜக தலைவர் கருத்து

புதுடெல்லி, ஏப்ரல் 18- தெலங்​கானா பாஜக மூத்த தலை​வர் பூரா நர்​சய்யா கவுட் தெரி​வித்​துள்​ளார். தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து அவர் மேலும் கூறிய​தாவது: தொகுதி மறு​வரையறை மசோ​தா​வின் சிறப்பு அம்​சம் என்​னவென்​றால், இந்த மசோதா இந்​தி​யா​வுக்கு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மீண்​டும் கிடைக்க உதவும். பாகிஸ்தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரை மீண்​டும் பெற வேண்​டும் என்​பது ஒவ்​வொரு இந்​தி​யரின் கனவு. ஒரு நாள் நாம் அதை திரும்ப பெறு​வோம். அந்த பிராந்தியத்தின் பிர​தி​நி​தி​கள் நாடாளு​மன்​றத்​துக்கு வரு​வார்கள். அது​தான் இந்த மசோ​தா​வின் சிறப்​பம்​சம். இவ்​வாறு பூரா நர்​சய்யா கவுட்​ கூறி​னார்​.